அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
121
If the government encroaches on the land, you will have to pay so many times the electricity bill! The order issued by the High Court!
If the government encroaches on the land, you will have to pay so many times the electricity bill! The order issued by the High Court!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு தான் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து மின் வாரியம் பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு ஓன்று வெளியானது அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் மின்நுகர்வோரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை தொடரந்து மின் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிவுக்கு வராமல் இருந்தது. அதனால் மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது,இருப்பினும் தற்போது வரை பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை அதனால் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை காலி செய்ய வேண்டும் என ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.மேலும் பத்து மடங்கு மின் கட்டணம் செலுத்த  தயார் என தெரிவித்தால் வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசிற்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.பத்து மடங்கு மின் கட்டணம் செலுத்த தயார் என மனு தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வைத்துள்ள நிலம் பட்டா நிலமா இல்லையா என அளந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K