வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை ஒழிக்க ஐடியா? ஒரு எலுமிச்சை இருந்தால் போதும்!

0
165
#image_title

வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை ஒழிக்க ஐடியா? ஒரு எலுமிச்சை இருந்தால் போதும்!

நம் வீட்டில் வைத்துள்ள அட்டைப்பெட்டி, சமையலறை, குளியலறை, இதுபோன்ற இடங்களில் கரப்பான் பூச்சி அதிகமாக இருக்கக்கூடும்.

இந்த கரப்பான் பூச்சியில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் உள்ளது. இந்த கரப்பான் பூச்சியால் நம் உடலுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகும். வாந்தி ,கொமட்டல் ,பேதி, காய்ச்சல் , ஆஸ்துமா, போன்ற நோய்களை உருவாக்குகிறது.

ஒரு டம்ளர் பாலில் நாட்டு சக்கரை அல்லது வெல்லம் 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலந்த பாலை தனித்தனியாக எடுத்து

இரண்டு அல்லது மூன்று டம்ளர்களில் ஊற்றி கரப்பான் பூச்சி உள்ள இடங்களில் வைத்து விட வேண்டும்.பிறகு ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் நாம் வைத்த டம்ளரில் கரப்பான் பூச்சி இருக்கும்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படி செய்தால் கரப்பான் பூச்சி கண்டிப்பாக அழிந்துவிடும். மேலும் மைதா, சோடா மாவு, சர்க்கரை, இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலக்க வேண்டும். பிறகு கரப்பான் பூச்சி உள்ள இடங்களில் வைத்தால் கரப்பான் பூச்சி நிச்சயமாக வரவே வராது.

மேலும் நாம் வீட்டில் உள்ள 1 பெரிய வெங்காயத்தை எடுத்து நன்றாக நறுக்கி கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி வரும் இடங்களில் இந்த தண்ணீரை நன்றாக தெளித்து விட வேண்டும்.

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனுடைய சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் ஷாம்பு 1 ஸ்பூன் 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலந்துவிட்ட பின் உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கின்றதோ அங்கெல்லாம் தெளித்து விட்டால் கரப்பான் பூச்சி வரவே வராது.

author avatar
Parthipan K