வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

0
84

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும், பள்ளி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும், அது பார்ப்பதற்கு அருவருப்பாகவும் பிடிக்காதது போல பலர் உணருகிறோம்.

அத்துடன் சமையலறையில் பள்ளி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளது. எல்லா பாத்திரங்களிலும் போய் அமர்ந்து கொள்ளும். இதனைத்தொடர்ந்து பள்ளியை விரட்டுவது குறித்து தற்போது காண்போம்.

பல்லிக்கு வெங்காய வாசனை சுத்தமாக பிடிக்காது. எனவே, வெங்காயத்தை மூலைமுடுக்குகளில் வையுங்கள். இதன் காரணமாக பல்லி வராது. இதனை தொடர்ந்து வெங்காயத்தை அப்படியே வைக்காமல் ஒரு சின்ன தொட்டியில் மண்ணை போட்டு, அதில் வெங்காயத்தை போட்டு வைத்தால் வெங்காயத்தாள் முளைக்கும்.

இது பல்லி வரும் இடங்களில் வைத்தால் பல்லிகள் வராது. ஒருவேளை இது பயன் அளிக்காவிட்டால், கிருமிநாசினியான டெட்டால் வாங்கி சிறிதளவு தண்ணீருடன் 2 ஸ்பூன் சேர்த்து, அதனுடன் ஒரு மூடி எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு வெங்காயம், நான்கு பல் பூண்டு ஆகியவற்றை பேஸ்டாக அரைத்து கலந்து கொண்டு பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து கொண்டால் போதும்.

எங்கெல்லாம் உங்களுக்கு பல்லித்தொல்லை இருக்கிறதோ, அங்கெல்லாம் அங்கு நன்கு குலுக்கிவிட்டு ஸ்ப்ரே செய்து விட்டால் போதும். இதன் வாசனைக்கு ஒரு பல்லி கூட வராது. இதனை அடுத்து எலுமிச்சை சாற்றுடன், ஒரு வெங்காயம் சேர்த்து அரைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வாறு அடித்தாலும்
பல்லிகள் வீட்டிற்குள் வராது.

author avatar
Jayachithra