2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 

0
105

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!   இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு!  

2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டெஸ்ட் அணி, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி  தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து ஒரு நாள், டி20, டெஸ்ட் அணிகளை அறிவிக்கும்.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை தேர்வு செய்தது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 3 வீரர்களும் டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்தில் இருந்து 2 வீரர்களும் பாகிஸ்தானில் இருந்து 2 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான டி20 போட்டியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும் பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3-வது மற்றும் 4- வது வரிசையில் ஆட இந்தியாவின் விராட் கோலி மற்றும் டி20 போட்டியின் தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகிக்கும் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்திற்கு நியூசிலாந்தின் கிளென்பிலிப்ஸ், மற்றும் ஆல் ரவுண்டர்களாக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, இலங்கையின் வனிந்து ஹசரங்கா, டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் ஷாம் கர்ர்ன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி தரவரிசையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பர் ஆகவும், கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஷாம் கர்ர்ன் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

ஐசிசி தேர்வு செய்த டி20 தரவரிசை அணி:

1. ஜோஸ் பட்லர் ( கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) – இங்கிலாந்து        2. முகமது ரிஸ்வான்( பாகிஸ்தான்)  3.  விராட் கோலி ( இந்தியா)              4. சூரியகுமார் யாதவ் (இந்தியா)    5. கிளென் பிலிப்ஸ்  (நியூசிலாந்து) 6. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)        7. ஹர்திக் பாண்டியா (இந்தியா)     8. சாம் கரண்  (இங்கிலாந்து)           9. வனிந்து ஹசரங்கா (இலங்கை) 10. ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்)     11. ஜோஸ்வாலிட்டில்(அயர்லாந்து)