“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!

0
97

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!

இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனம் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார்.

உலகக்கோப்பையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

தொடர்ந்து சொதப்பி வரும் அவரை தூக்கிவிட்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பான ரெக்கார்ட் வைத்திருக்கும் ரிஷப் பண்ட்டை இறக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் இயான் சாப்பல் தினேஷ் கார்த்திக்கை அணிக்குள் எடுத்தது முட்டாள்தனம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “ரிஷப் பண்ட் பவுலர்கள் அஞ்சும் ஒரு இடது கை ஆட்டக்காரர். அவர் கில்கிறிஸ்ட் மற்றும் ஜெயசூர்யா போன்றவர். ஆஸ்திரேலியாவில் தன்னை நிரூபித்தவர். வருங்கால கேப்டன் ஆக கூடிய தகுதி உடையவர். அவரை ஸ்க்வாட்டில் வைத்துக்கொண்டு தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனமான முடிவு. தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 30 ரன்களாவது சேர்த்திருந்தால், அது அணிக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை” எனக் கடுமையாக விமர்சித்து உள்ளார்.