தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்!

0
180
I will show my son Vijay's picture first! The update released by the famous leading actress!
I will show my son Vijay's picture first! The update released by the famous leading actress!

தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம்  கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிரசவத்திற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த காஜல் தற்போது மீண்டும் பழையபடி நடிப்பை தொடங்கியுள்ளார்.

சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகையில் தனது மகனை வளர்க்கும் விதம் பற்றி அவர் தெரிவித்துள்ளார். அப்போது  அவர் கூறியதாவது தனது மகனுக்கு எட்டு வயது ஆகும் வரை மொபைல் மற்றும்  டிவி உள்ளிட்ட விஷயங்களை காட்ட மாட்டேன். அவர் ஸ்கிரீன் டைம் என்கிற விஷயத்தின் மீது அதிகம் அக்கறை காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் எட்டு வயதிற்கு பிறகு தான்  படங்களை பார்க்க அனுமதிப்பேன். என்னுடைய  மகனுக்கு முதன் முதலில்  துப்பாக்கி படத்தை தான் காட்டுவேன் என கூறியுள்ளார். காஜல் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் துப்பாக்கி. விஜய்க்கு ஜோடியாக அவர்  அதில்  நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பின் தான் எனக்கு மிக அதிக பட வாய்ப்பு அமைந்தது எனவும் கூறியுள்ளார். அதனால் அந்தப் படத்தை தான் நான் முதலில் தன் மகனுக்கு காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் மத்தியிலும் காஜல் ரசிகர்கள் மத்தியிலும் இந்த செய்தி  வைரலாகி வருகிறது.

author avatar
Parthipan K