எவ்வளவு விலை கொடுத்தாவது காங்கிரஸைக் காப்பாற்றுவேன்: சச்சின் பைலட் ஆவேசம்!

0
69

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதில் அதிகாரப்பகிர்வு காரணமாக ஒரே கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது.

இதில் முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பேற்றபோது துணை முதல்வராக சச்சின் பைலட் தெரிவுசெய்யப்பட்டார்.
இதில் சச்சின் பைலட்டுக்கு போதிய அதிகாரம் அளிக்கவில்லை என அவர் கட்சியில் இருந்து அதிருப்தியடைந்து, தனது ஆதரவு எம்எல்ஏ கைகளுடன் பாஜகவிற்கு செல்வதாக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைத்தார்.

இதன்பிறகு சச்சின் பைலட் பாஜகவில் இருந்து வெளியேறி திரும்பவும் காங்கிரஸின் கட்சிக்குள்ளேயே இணைந்தார். தற்போது அண்மையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தினை முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

அதில் பாஜக அரசியல் செய்து, ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டதைப் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

அதில் அசோக் கெலாட், “எத்தனை முயற்சிகள் செய்து எனது ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும், அதற்கு எந்த விலை கொடுத்தாவது ஆட்சியை விடமாட்டேன்” என அவர் கூறினார்.

அவர் பேசியபின் பேசிய எதிர்க்கட்சித் பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர், “காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டுப் பேசும் போது, சச்சின் பைலட் என் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். சமீபத்தில் அரசின் சார்பில் சச்சின் பைலட் மீது முன்னதாக எடுக்கப்பட்ட குற்றச்சாட்டு நோட்டீஸ்களை, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சச்சின் பைலட் ஆவேசமடைந்து, “எதற்காக என்னுடைய பெயரை அடிக்கடி உச்சரிக்கிறீர்கள், நான் தற்போது இருந்த இடமும் மாற்றப்பட்டுள்ளது, நான் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். சபாநாயகரும், கட்சியின் கொறடாவும் எனக்கு இந்த இடத்தை அளித்துள்ளனர்.

கட்சியும் ஆட்சியும் தற்போது பாதுகாப்பாக உள்ளது. கட்சியில் எந்த இடையூறு வந்தாலும், எத்தனை விலை கொடுத்தாவது காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றுவேன்” என அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக் கட்சியின் அசோக் கெலாட் அரசு 107 எம்எல்ஏக்கள் உடன் பெரும்பான்மை வகித்தது. அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் சிபி ஜோசி அறிவித்து அடுத்த பேரவையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

author avatar
Parthipan K