நீ இப்படி போட்டா நான் அப்படித்தான் அடிப்பேன்! இங்கிலாந்து அணிக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை!

0
54

ஒவலில் நேற்று நடந்த முதல் ஒருநாள் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் கூட பறி கொடுக்காமல் வீழ்த்தி அசத்தியது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களை எடுத்து ஆட்டமிடக்காமலிருந்தார்.

அதேபோல மற்றொரு ஆட்டக்காரரான ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமடக்காமலிருந்தார். அதேபோன்று ரோகித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் என்று எகிறி வரும் பந்துகளை வீசி இங்கிலாந்து அணியின் வந்து வீச்சாளர்கள் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து நேற்று ஆட்டம் முடிவடைந்து அதன் பிறகு ரோகித் சர்மா தெரிவிக்கும்போது பிட்சையும் பார்த்தேன். அதேநேரம் வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆகவே பந்துவீச்சை தேர்வு செய்வது தான் நல்லது என நினைத்தேன். ஆனால் ஒருபுறம் சில நிபந்தனைகள் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. டி20 தொடரில் பிளாட் பிட்சுகளை பார்த்தோம்.

ஆகவே இன்று வேக பந்துவீச்சாளர்களுக்கு அருமையான தினம் பந்து வீச்சாளர்களுக்கு பிட்சிலிருந்து எந்தவிதமான உதவிகள் கிடைக்கும் என்று கணிக்க வேண்டும். அதேபோல சுழல் மற்றும் பவுன்ஸ் அதற்கு ஏற்ற வியூகம் வகுத்து பந்து வீச்சு மாற்றம் என திட்டமிட வேண்டும், நம்முடைய பந்துவீச்சாளர்களின் தரம் என்னவென்று நமக்கு நன்றாகவே தெரியும் என கூறி இருக்கிறார் ரோஹித் சர்மா.

அதேபோல நானும் தவனும் நிறைய ஆட்டங்களில் இணைந்து விளையாடி இருக்கிறோம். எங்களுக்குள் புரிதல் அதிகம். அந்த முதல் ரன் அவுட் வாய்ப்பு தவிர அவர் அனுபவசாலி என்று தெரிவித்திருக்கிறார்.

ஷார்ட் பிட்ச் பந்துகள் எகிறி வரும் பந்து வீசும் யுக்தி தொடர்பாக தெரிவித்தாக வேண்டும், புல் ஹுக்‌ஷாட் ரிஸ்க் ஷாட் தான். ஆனாலும் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வருவது வரட்டும் என்று அந்த ஷாட்களை விளையாடினேன்.

ஒரு விதத்தில் போடட்டும் அடிப்போம் என்றே இருந்தேன், இந்த மாதிரியான பந்துகள் வருவதையும் அதனை அடிப்பதில் எனக்கு சக்சஸும் இருக்கும் வரையில் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார் ரோஹித் சர்மா.

நேற்றைய தினம் ஆட்டம் பகலிரவு ஆட்டம் என்று பெயரே தவிர பகலிலேயே ஆட்டம் முடிவுற்றது. டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் பின் தொடர்ந்து வெற்றி பெற்று விட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும், ஊடகங்களும், எவ்வளவோ பேசினர். அதற்கு தக்க பதிலடி நேற்றைய தினம் இந்திய அணி கொடுத்திருக்கிறது.