கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

0

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

உலகின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரரான யோகன் பிளேக் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என்றும் அதிலும் ஐபிஎல் அணிகள் இரண்டை குறிப்பிட்டு அந்த அணியில் விளையாட ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வேன். அதன்பின் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில் எங்கள் நாட்டு அணியான மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாட நான் விரும்பவில்லை.

நான் மிகவும் விரும்புவது ஐபிஎல் போட்டிகளைத்தான். ஐபிஎல் போட்டிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கொல்கத்தா அல்லது பெங்களூர் அணியில் விளையாட நான் விரும்புகிறேன்.

எனக்கு பெங்களூரு அணியை ஏன் பிடிக்கும் என்றால் அதில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்ளனர். அதனால் அந்த அணி எனக்கு பிடிக்கும். அதேபோல் எனக்கு ரொம்ப பிடித்த அணிகளில் கொல்கத்தாவும் ஒன்று. இந்த இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் ஓய்வு பெற்றதும் கால்பந்து போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் யோகன் பிளேக் கிரிக்கெட் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat