இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!

0
147
#image_title
இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!
நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று மீண்டும் தோனியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இதையடுத்து போட்டி முடிந்த பிறகு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியதை பற்றி குஜராத் கேப்டன்  ஹர்திக் பாண்டியா அவர்கள் பேசினார்.
நேற்றைய போட்டி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள்  “நாங்கள் பலமான அணியாக இருந்த போதிலும் சில  தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்கள் கூடுதலாக விட்டு கொடுத்துவிட்டோம். இந்த கூடுதலான 15 ரன்கள் தான் நாங்கள் தோல்வி பெறுவதற்கு காரணமாக அமைந்தது. நிறைய விஷயங்களை நாங்கள் சரியாகத்தான் செய்தோம்.
இருந்தும் சில ஓவர்களில் அதிக ரன்கள் கொடுக்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் பனி வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பனி வரவில்லை. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா “பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் தோனிக்கு நிகர் தோனி மட்டும்தான். தோனியை போல பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது கடினமான ஒன்று. தோனி அடிக்கடி பந்துவீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். நாங்கள் விக்கெட்டுக்களை இழக்க இது தான் காரணம். பாராட்டுகள் எல்லாம் தோனியையே சேரும். ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் நான் தோனியை சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
இன்று அதாவது மே 24ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி வெள்ளிக் கிழமை அதாவது மே 26ம் தேதி நடைபெறும் இரண்டாம்  குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
author avatar
Savitha