நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் – கெவின் மேயர்

0
52
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டு இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கான டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை கையாள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா டிக்டாக் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘கனத்த இதயத்தோடு நான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
author avatar
Parthipan K