நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக! 

0
102
BJP Women General Secretary
BJP Women General Secretary

நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக!

சமீபத்தில் பாஜகவில் மாநில துணை தலைவர்கள் ,மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பதவி மாற்றம் நடைபெற்றது. அதற்கான பட்டியலையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

அந்த வரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயல் பகுதியை  சேர்ந்த கவிதா ஸ்ரீகாந்த் என்பவர் மாநில மகளிரணி செயலாளராக இருந்து வந்தார். தற்பொழுது அவர் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக  உயர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறந்தாங்கி யின் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. வைக்கப்பட்ட  பேனரில் மாவட்ட செயலாளர் மற்றும் நகர தலைவர் படம் இன்றி இருந்துள்ளது.

இதனை கண்ட மாவட்ட செயலாளர் மற்றும் நகர பாஜக தலைவர் கோபமுற்று உள்ளனர். தங்கள் புகைப்படம் இல்லாததால்  வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.

இவ்வாறு நன்றி தெரிவித்த பேனர்களை பாஜக நகர தலைவர் அகற்றி வருகிறார் என மகளிர் அணி பொதுச் செயலாளராக தற்போது புதிய பதவி வகிக்கும் கவிதா ஸ்ரீகாந்த்-யிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் போஸ்டரை அகற்றி கொண்டிருந்த இடத்திற்கு மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா மற்றும் அவரது கணவர் சென்றுள்ளனர்.

ஏன் பேனரை எடுக்கிறீர்கள்? என்று மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மற்றும் அவரது கணவர் கேட்டுள்ளார். தங்களது படம் அச்சிட படாததால் பேனர்களை அகற்றுகிறோம் என்று அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதற்கு மாநில பொது செயலாளர் யின் கணவர், நீ யார் பேனரை எடுக்கிறாய் என்று தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு நகர பாஜக தலைவர் நாங்கள் யாரென்று தெரியுமா? என்று அவருக்கு எதிராக கேள்வி கேட்டுள்ளார்.

நான் மாநிலம் டா! நான் நகரம் டா! என்று மாற்றி மாற்றி சரமாரியாக பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி விட்டது. மாநில பொது செயலாளரின்  கணவர் ஸ்ரீகாந்த் நகர தலைவரை தன் வைத்திருந்த வண்டி சாவியால் தாக்கியுள்ளார். காயமடைந்த நகர தலைவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசாரிடம் நகர தலைவர்  புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் மேலும் இளங்கோவன் ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா மற்றும் அவரது கணவர் நகர தலைவர் மீது புகார் கொடுத்து உள்ளனர். கட்சிக்குள்ளேயே இவ்வாறு பிரிவினை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகார் அளித்துள்ளது மற்ற கட்சிக்கிடையே வேடிக்கையாக உள்ளது.