டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

0
119

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் படப்பிடிப்பு முழுவதும் கோவை வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது டான் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் அவரின் அடுத்த படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “அடை மழையிலும் விடாமல் டப்பிங். டான் படத்திற்கான எனது டப்பிங் பணியில் நிறைய உணர்ச்சிகள், இதில் நான் என் பள்ளி ,கல்லூரி நாட்களை மீண்டும் பார்த்தேன், இந்த பயணம் எனக்கு மிகவும் பிடித்தது” என்று சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K