பத்து தல படத்தில் ஏன் நடித்தேன் என்று புலம்பினேன்! நடிகர் சந்தோஷ் பிரதாப் கருத்து!!

பத்து தல படத்தில் ஏன் நடித்தேன் என்று புலம்பினேன்! நடிகர் சந்தோஷ் பிரதாப் கருத்து!
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தில் ஏன் நடித்தேன் என்று புலம்பினேன் என பத்து தல தியைப்படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் பேசியுள்ளார்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். இவர் தொடர்ந்து தாயம், மிஸ்டர் சந்திரமௌலி, சார்பாட்டா பரம்பரை, ஓ மை கடவுளே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் ஒபெலி என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் பத்து தல திரைப்படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தில் நடித்தது பற்றி நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் “பத்து தல திரைப்படத்தில் ஏன்டா நடித்தேன் என்று இருந்தேன். பத்து தல படத்தில் நடித்ததை நான் வீட்டில் கூட சொல்லவில்லை. ஆனால் படம் வெளியான பின்னர் அனைவரும் என்னை பாராட்டினார்கள்” என்று சமீபத்திய விழாவில் பேசினார்.