நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

0
88
BJP Women General Secretary
BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.பல அரசு அலுவலகங்களில் மோடியின் புகைப்படத்தை வைக்குமாறு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இதனால் பலமுறை கலவரமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல தற்போது அனைத்து கோவை அரசு அலுவலகங்களிலும் மோடியின் புகைப்படத்தை வைக்க அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்து பாஜக வினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.அந்த கூட்டம் நேரம் கடத்த கடத்த போராட்டமாக மாறியது.போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பாஜகவினரை கைது செய்து வேனில் ஏற்றினர்.கோவை ஆட்சியரின் அலுவலகம் முன்பு தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.அங்கு தினந்தோறும் பக்தர்கள் பலர் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.அதேபோல கோணவாய்கால்பாளையம் என்ற பகுதியில் வசிப்பவர் தான் பச்சியம்மாள்.இவர் தனது பேத்தியுடன் தண்டுமாரியம்மான் கோவில் வந்துள்ளார்.

அப்போது அங்கு நடைபெற்று கொண்டிருந்த போராட்டத்தை வேடிக்கை பார்த்துள்ளார்.அந்த சமையத்தில்  போரட்ட களத்தில் உள்ளவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.அப்போது அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மூதாட்டி பச்சியம்மாளையும் கைது செய்துள்ளனர்.நான் சாமி கும்பிட தான் வந்தேன் போராட்டத்தில் கலந்துகொள்ள அல்ல என அந்த மூதாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.பிறகு போலீசார் அந்த மூதாட்டியை விடுவித்துள்ளனர்.யார் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என கூட கண்டறியாமல் அதனை வேடிக்கை பார்த்தவர்களையும் கைது செய்வது மிகப்பெரிய குற்றம்.அவர்களது பணியை முழு கவனத்துடன் செய்ய வேண்டும்.நாளுக்கு நாள் போலீசார் மீது தொடர் புகார்களாகவே வருகிறது.