Connect with us

Crime

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!

Published

on

I hit the snake! But how did this happen! The excitement that the husband said!

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தை அடுத்த பையனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியின் நடத்தையில் தினமும் சந்தேகப் படுவார். அதன் காரணமாக அவர்களுக்குள் தினந்தோறும் சண்டை ஏற்படும், மேலும் அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்த மதுவினால் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

Advertisement

மதுபோதைக்கு அடிமையான இவர் தொடர்ந்து தினமும் மது பருகிவிட்டு வீட்டில் வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் இவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் காரணமாக மனைவியிடம் தகராறு செய்த அவர், தகராறு ஒரு கட்டத்தில் கைமீறிப் போன நிலையில், கிரிக்கெட் ஸ்டம்பினால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறவினர்களிடம் பாம்பு கடித்ததால் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர்கள் இதை கேட்டாலும், ரவிக்குமாரின் பேச்சினால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவரை காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்துள்ளனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement