சமையலில் செஃப் தாமுதான் எனக்கு முன்னோடி!! சென்னை மேயரின் அசத்தல் ஸ்பீச்!!

0
288
#image_title

சமையலில் செஃப் தாமுதான் எனக்கு முன்னோடி!! சென்னை மேயரின் அசத்தல் ஸ்பீச்!!

சமையல் இனிமையான கலை ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்க வேண்டும் என சமையல் நிபுணர் தாமு பேட்டி!

சென்னை அண்ணா நகரில் ராயல் ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவகத்தை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மேடையில் மேயர் பிரியா பேசியபோது,

இந்த ஹோட்டலை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. நான் ரொம்ப லக்கி, என் கையால் திருந்த ஹோட்டல் நல்ல போகும் என்றனர். நானும் மனசார இந்த ஹோட்டல் பெரிதாக வேண்டும் என விரும்புகிறேன்.

கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரிடம் தான் எல்லாம் உள்ளது என் கையில் ஏதும் இல்லை, சமையல் நிபுணர் தாமுவின் உணுவு வகைகள் இங்கு இருக்கும் என்றார் இந்த ஒன்று போதும் இந்த ஹோட்டல் நன்றாக வருவதற்கு.

தாமு அவர்கள் என்னை தெரியுமா என கேட்டார்.ஒரு வடத்திற்கு முன்பு உங்களுடைய சமையல் குறிப்புகளை பார்த்து அதிகம் சமைத்துள்ளேன் என்றார்.

ஒரு பெண்ணாக இந்த இடத்தில் வந்து நிற்பது சாதாரணம் விசயம் அல்ல ஆர்ஆர்ஆர் படம் போல இந்த ஆர்ஆர்ஆர் ஹோட்டலும் பிரபலமாகும் என நினைக்கிறேன் அதற்கு வாழ்த்துக்கள் என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சமையல் நிபுணர் தாமு பேசியபோது,

இந்த ஹோட்டலில் என்னுடைய பங்கு இருக்கும் தமிழகம் முழுவதும் இது பிரபலமாகும், குழந்தைகள், பெரியவர்கள் என தனித்தனி மெனு உள்ளது.

அனைவரும் வந்து சுவைக்க வேண்டும், ஒவ்வொரு உணவிலும் மருந்தே உணவு என்ற ஐடியா இருக்கும் தனியா,மிளகு,சீரகம்,சோம்பு, கருவேப்பிலை இது போன்ற உடலுக்கு என்ன தேவையோ மருந்து சார்ந்த உணவுகள் தான் இந்த உணவகத்தில் கிடைக்கும் என்றார்.

உங்களுடைய வீடியோக்களை பார்த்து அதிகம் சமைக்க தொடங்கியுள்ளனர். எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்விக்கு கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நம்மளுடைய உணவை அவர்கள் சமைத்து சாப்பிடும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது என்றார் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் நம்முடைய உணவை பத்து பேர் சமைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தயவு செய்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆண் மகன் ஆகட்டும், பெண் பிள்ளையாகட்டும் சமையல் கற்றுக் கொடுங்கள் அவர்கள் நன்றாக இருப்பார்.

சமையல் ஒரு இனிமையான கலை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார்.

author avatar
Savitha