எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

0
85

எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்கிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகின்றது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கின்றது. ஆனாலும் தமிழ்நாட்டில் அந்த சின்னத்தை மக்கள் நீதி மைய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்ற கமல்ஹாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்களுடைய சொத்து அவருடைய மடியில் தவழ்ந்தவன் நான் மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தகுந்த பாடத்தை கற்பிக்கும். ஓட்டிற்கு 5 ஆயிரம் பணம் கொடுத்தால் வாங்காமல் 5 லட்சமாக கேளுங்கள் நான் பணம் கொடுக்க மாட்டேன் நான் வெற்றி அடைந்தால் இதே சிவகாசியில் சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

புரட்சித்தலைவர் திமுகவில் இருந்த நேரம் திமுக திலகம் அல்ல, தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு அதிமுக திலகமும் கிடையாது, என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் நினைவிருக்கட்டும் என்று தன்னுடைய வலைதளப்பக்கத்தில், பதிவிட்டு இருக்கிறார் நடிகர் கமல்.