நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

0
38

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார்.எதிர்க்கட்சி தரப்பில் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர்.ஆளும் பாஜக அரசால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று எம்.பி. கனிமொழி கூறினார்.இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக பேசக்கூடாது. திமுகவின் கடந்த கால ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகழந்த கொடுமைகள் குறித்து காரசாரமாக பேசினார்.

மேலும் கடந்த இரு தினங்களாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேச பெரும்பாலான காட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச தொடங்கினர்.தாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் பிரதமர் மோடி அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.மேலும் மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோம்.மேலும் நாட்டு மக்களின் நலன் மீது மட்டுமே தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் விவாதம் நிறைவு பெற்றதை அடுத்து மாலை 5 மணிக்கு மேல் பிரதமர் மோடி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க தொடங்கினார்.

மக்களவையில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை கவனித்து கொண்டு வருகிறேன். எதிர்க்கட்சிகள் எங்கள் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது ஒன்றும் புதிதல்ல.ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தங்கள் பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து அந்த ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றிருந்த இடங்களை கூட எதிர்கட்சிகளால் பெற முடியாமல் போனது.மேலும் மக்கள் தங்கள் அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக நினைக்கின்றேன் என்றார்.இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நாட்டின் வளரச்சி மீதும் நாட்டு மக்களின் மீதும் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை.மேலும் ஆட்சியை பிடிப்பதில் தான் அவர்களுக்கு அக்கறை.அதில் தான் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். தங்கள் அரசு முக்கிய மசோதாக்களை செயல்படுத்தும் பொழுது எதிர்க்கட்சிகள் அவற்றை வைத்து அரசியல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது தங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளது .இதனை நான் நல்ல சகுனமாக தான் பார்க்கின்றேன். மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் பொழுதெல்லாம் அது தங்களுக்கு சாதகமாக தான் இருக்கின்றது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் நாட்டு மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசுக்கு எதிராக போடும் பால் எல்லாம் ‘நோ பாலாக’ தான் இருக்கின்றது. இதனால் தங்கள் அரசு சுலபமாக சதம் மற்றும் சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது.மேலும் 2028 ஆம் ஆண்டு தங்கள் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தாலும் பாஜக அரசு அதனை எதிர்கொள்ள தயாரக உள்ளது என்று கூறினார்.