உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி…! வி.பி.துரைசாமி விளாசல்…!

0
60

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா சம்பந்தமாக கலந்தாய்வு மற்றும் கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் மாநில துணை தலைவர்கள் விபி துரைசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி அவர்கள், திமுகவும் காங்கிரசும் விவசாய சட்டத் திருத்த மசோதாவின் பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் கூறி வருகிறார்கள். என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் இறங்கி மிரட்டுவதை யாராவது நிருபித்துக்காட்டினால், எந்த நேரத்திலும் நானும் அண்ணாமலையும் அவர்களோடு நேரடி விவாதத்திற்கு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வை பொறுத்தவரையில் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசு தந்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும் இதன் காரணமாகத்தான் தேனி சிலுக்குவார்பட்டியை சார்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன் 675 மதிப்பெண் பெற்று சாதித்திருக்கிறார். அவரால் திமுக மருத்துவக் கல்லூரியில் கோடிகோடியாக பணம் செலுத்தி மருத்துவ படிப்பை படிக்க முடியுமா? இந்த போட்டி நிறைந்த உலகில் முறையான பயிற்சியும், உழைப்பும், இருந்தால் தான் சாதித்துக் காட்ட முடியும். நானும் ஐபிஎஸ் தேர்வு எழுதினேன் அதுபோல அண்ணாமலையும் ஐபிஎஸ் தேர்வு எழுதியுள்ளார். அவர் பயிற்சியும் முயற்சியும் இருந்ததால் தான் வெற்றி பெற்றுள்ளார். நான் முயற்சி செய்யாததால் தோல்வி அடைந்து விட்டேன் என்று தெரிவித்து இருக்கிறார்.