மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

0
158
#image_title

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

ஜெயவாணிக்கும் குமாரசாமிக்கும் 20 வயசு வித்தியாசம். ஜெயவாணி படித்துக் கொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினருக்கும் குமாரசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜெயவாணியை நன்றாக படிக்க வைப்பதாக கூறி நிறைய செலவு செய்து படிக்க வைத்துள்ளார். பின்னர் ஜெயவாணியை  குமாரசாமி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அவருக்கு வயது 40 தாண்டி விட்டது.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் திடீரென குமாரசாமிக்கு ஜெயவாணியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த ஜெயவாணி முன்பு பிச்சைக்காரன் ஒருவன் தகாத வார்த்தைகளால் வழிமறித்து திட்டியுள்ளான். பின்னர் கையில் வைத்திருந்த பிளேடால் முகத்தில் வெட்டியுள்ளான். வலி தாங்காமல் ஜெயவாணி கூச்சலிட்டுள்ளார். அப்போது இதை செய்தது தனது கணவர் தான் என்பதை ஜெயவாணி கண்டு கொண்டார். கூட்டம் கூடவே குமாரசாமி அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். பின்னர் ஜெயவாணி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் இந்த சம்பவம் பற்றி ஜெயவாணி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருமால் விசாரணை செய்தார். பிளேடால் வெட்டி காயம் உண்டாகுதல், வழிமறித்து தாக்குதல், கொலை முயற்சி, மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரசாமியை அதிரடியாக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தேவையற்ற சந்தேகத்தின் விளைவால் அந்த குடும்பத்தில் நிம்மதி போனதும் இல்லாமல் பெரும் புயல் வீசி உள்ளது.