இடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!

0
100

அமெரிக்காவின் பல மகான்களை புரட்டி எடுத்து வரும் சூறாவளி தற்சமயம் நியூயோர்க் நகரில் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரையில் பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்தது.

சென்ற மூன்று தினங்களுக்கு முன்னர் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் காரணமாக, பெய்த கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு உண்டானதால் பல நகரங்களில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லூசியானா,மிஸ்ஸிலிப்பியில் இடா புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் தெளிவாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடுமையான பாதிப்பை உண்டாக்கிய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா புயல் இருக்கிறது.

சூறாவளியின் பாதிப்பு காரணமாக, கடலோர மாவட்டங்கள் சீன் லேகெட் லிஃப்ட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைகள் கன மழை கொட்டும் காட்சியும் அதற்கு நடுவில் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்துபோகும் காணொளியும் உள்ளூர் மக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் நியூயார்க் நகரின் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது பல பகுதிகளில் சுரங்கப் பகுதிகளிலும் வெளி இடங்களிலும் பொது மக்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

தற்சமயம் நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நகர மேயர் பில் டி பிளாசியோ வரலாறு காணாத வாழ்நிலையை அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் நல்லதா நகர சாலைகள் மிக பயங்கரமான நிலையில் இருக்கின்றன என கூறியிருக்கிறார்.

நியூஜெர்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளம் காரணமாக, நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டிருக்கின்றன. நியூயோர்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது