ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா!

0
196

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. அந்த பிராந்தியத்தில் இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேறியது. அதன்பின்னர் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உண்டானது.

தலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடுமையான குழப்பம் உண்டானது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட இருவரில் ஒருவர்தான் பிரதமராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இவர்களுக்கு இடையில் பிரதமர் ஆவதில் கடுமையான மோதல் நிலவி வந்தது ஹைபதுல்லா அகுண்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும் நேற்றைய தினம் இடைக்கால தாலிபான் அரசு அறிவிக்கப்பட்டது. இதில் முல்லா ஹசன் நாட்டின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகுண்சடாவிற்கு நெருக்கமான தலைவராக பார்க்கப்பட்ட இவர் அங்கே தலைமை கவுன்சில் தலைவராக தாலிபான் குழுவில் செயல்பட்டு வந்தார். கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தாலிபான் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், இவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முல்லா கானி பராதர் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லா காணி நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இவர்தான் தோகாவில் தாலிபான், அமெரிக்கா ஒப்பந்தம் நடக்க முக்கிய காரணமாக அமைந்தவர். இருந்தாலும் ஆச்சரியமாக இவருக்குத் துணை பிரதமர் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்தோடு அனாஸ் ஹக்கானிக்கு எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இவருடைய தம்பி சிராஜூதீன் ஹக்கானிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உச்சபட்ச தலைவர் தொடர்பான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும், ஹைபதுல்லா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையாக அரசு அறிவிப்பு வெளியாகும் சமயத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த தாலிபான் அரசியல் 33 அமைச்சர்கள் நிர்வாகிகள் முல்லாக்கள் உள்ளிட்டோர் ஐ.நாவால் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது அந்த நாட்டின் பிரதமர் முல்லா ஹாசன் தடை செய்யப்பட்ட தீவிரவாதி பட்டியலில் இருப்பவர் தான் இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜூதீன் ஹக்கானி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப் பெரிய தீவிரவாதி ஆவார் என்று சொல்லப்படுகிறது இவரைப் பற்றிய தகவல் உள்ளிட்டவற்றை தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்கா பல கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பல தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிவித்து அமெரிக்கா தேடி வந்தது. இவர் ஹக்கானி குழுவை சேர்ந்தவர் இந்த ஹக்கானி குழு பாகிஸ்தானின் நெருக்கமான தாலிபான் பிரிவாகும். ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் இந்த பிரிவு தீவிரவாத கொள்கையும், பாகிஸ்தானின் நேரடியாகவும், கொண்ட குழுவை என்று சொல்லப்படுகிறது. இந்த குழுவின் இரண்டாம்கட்ட தலைவரான சிராஜூதீன் ஹக்கானி தான் தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய புதிய உள்துறை அமைச்சர். சர்வதேச அளவில் அமெரிக்கா ,ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளில் இவர் தேடப்பட்டு வருகிறார்.

இவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அல்லது இவருடைய இருப்பிடம் தொடர்பான தகவலை தருபவர்களுக்கு முப்பத்தி ஆறு கோடி ரூபாய் வரையில் வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2008ஆம் வருடம் அறிவித்தது. 2008ஆம் ஆண்டு காபூலில் உணவுவிடுதி ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் மரணம் அடைந்தார்கள். இதில் சிராஜூதீன் ஹக்கானி தான் முதல் குற்றவாளியாக பார்க்கப்பட்டார். அத்துடன் ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அமெரிக்காவில் ஆதரவு பெற்ற ஹாமித் கார்சாயை கடந்த 2008ஆம் ஆண்டு இவர் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அப்போது அவர் தப்பி விட்டார் என கூறப்படுகிறது.

இதனால்தான் அமெரிக்காவின் எப்பிஐ, சி ஐ ஏ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றங்களுக்காக இவரை மிக தீவிரமாக தேடி வந்தது. அப்படி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் தாலிபான் குழுவைச் சார்ந்த ஒருவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அதிலும் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் உள்துறை அமைச்சராக இவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.