ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம்

0
133
HP Chromebook 11a
HP Chromebook 11a

ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம்

கொரோனா காரணமாக குழந்தைகளுக்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க HP லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லேப்டாப் பெயர் HP Chromebook 11a ஆகும்.  மலிவான விலையில் புதிய லேப்டாப்  சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது HP நிறுவனம்.  இந்த லேப்டாப் டச் டிஸ்பிளே அம்சத்துடன் உள்ளது.

கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கிறது. என்ன தான் மொபைல் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டாலும் சற்று பெரிய ஸ்கிரீனில் வகுப்புகளை கவனிப்பது மாணவர்களின் சிரமத்தை குறைக்கும். படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

இந்நிலையில் மாணவர்களுக்கு என்றே HP நிறுவனம் ஏராளமான Chromebook மாடல் லேப்டாப்களை விற்று வருகிறது.

லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.21,999. லேப்டாப்பை வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் வழியே ஆன்லைனில் வாங்கலாம். இந்த புதிய HP Chromebook 11a ,11.6 அங்குல எச்டி தொடுதிரை அம்சம் (HD touch-screen display) மற்றும் QWERTY கீபோர்ட்டை கொண்டுள்ளது. மேலும் மாற்றத்தக்க வடிவ காரணியில் வருகிறது.

HP Chromebook 11a Price (18 Apr 2021) Specification & Reviews । HP Laptops

சிறிய வகுப்பு மாணவர்களுக்காக (2-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீட்டில், வகுப்பறையில் மற்றும் கலப்பு முறை கற்றல் சூழல்களில் இணைக்க, அவர்களுக்கு உந்துதலாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க உதவும்.

author avatar
Gayathri