இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

0
114

காலையில் எழுந்தவுடன் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி என்ன செய்வது? என்பது மிகவும் பெரிதான வேலையாக இருக்கும். தற்போது எலுமிவ்ஹியில் எவ்வாறு சட்னி செய்வது என்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய எலுமிச்சை -ஒன்று
நல்லெண்ணெய் -ஒரு டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு -ஒரு டீஸ்பூன்
பூண்டு -4 பல்

செய்முறை :

பெரிதான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸாக இருந்தால் இரண்டு எலுமிச்சை பழம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு பிறகு மிளகாய்த்தூள் மற்றும் உப்பை நன்றாக கலக்கவேண்டும்.

கிளறிய பின் காரம் அவ்வளவாக தெரியாது. நிறமும் கலந்து காணப்படும். எலுமிச்சைபழ சாற்றையும் தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் எடுத்து சேர்த்து கொள்ளுங்கள். எலுமிச்சையை அதிகமாக இருந்தால் கூடுதலாக மிளகாய்த்தூளை சேர்த்துக் கொள்வது நல்லதாகும். அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வாணலியில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை சேர்க்கவும்.

சட்னி செய்வதற்கு நல்லெண்ணைத் தவிர வேறு எதுவும் பயன்படுத்தக் கூடாது. சுவையையும், காரத்தையும் அதிகமாகக் கொடுக்கும். அது பொரிந்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். அதன்பின் சட்னியுடன் தாளித்தவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள் . தேவைக்கு ஏற்ப கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை கலந்து உள்ளதால் இட்லி மற்றும் தோசை சப்பாத்தி, பூரி போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். மேலும் இது இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு அவசர நேரத்தில் உதவியாக இருக்கக்கூடிய சட்னியாகும். மேலும் காஷ்மீரி மிளகாய்த்தூள் அதிகமாக உபயோகிக்க கூடாது. கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தவிர வேறு எந்த எண்ணையும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருக்கும் காரணத்தால் மயக்கம் வருவதை தடுக்கும். உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

author avatar
Jayachithra