விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

0
109

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்கள் நிரம்பிய இந்த நேரத்தில், ஊருக்கு போகனும் இல்லனா குடும்பத்துடன் பயணம் செய்ய ப்ளான் பண்ணி இருக்குற எல்லாருக்கும் IRCTC டிக்கெட் புக்கிங் என்பது ஓர் பெரிய சவால் தான் !

இந்நிலையில் ஈஸியா தட்கல் டிக்கெட் எப்படி புக் பண்ணலாம், அப்படியே டிக்கெட் போட்டாலும், நாம போக முடியாத சுழ்நிலையில் நாம போட்ட டிக்கெட்டை வேறோருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி என, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் அடிக்கடி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கூட கவனிக்காத பல ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் டிப்ஸ்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உங்கள் இரயில் டிக்கெட்டை இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் செய்ய முடியாது. அருகில் உள்ள இரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்துக்குச் சென்று தான் இதைச் செய்ய முடியும்.

இரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணிநேரத்துக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து (electronic reservation slip) அதையும், உங்களது ID ப்ரூஃப்பில் ஏதேனும் ஒன்றையும், பெயர் மாற்ற நினைப்பவருக்கும், உங்களுக்குமான உறவை உறுதி செய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும். பணிக்காக பயணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு டிக்கெட்டை இன்னொருவர் பெயருக்கு மாற்றச் சிறப்பு சலுகைகள் உண்டு.

அடுத்து பிரீமியம் தட்கல் பற்றி, தட்கல் இரயில் டிக்கெட்கள் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் கொடுக்கப்படும், இதனுடன் பிரீமியம் தட்கல் என்ற பிரிவு டிக்கெட்களும் கொடுக்கப்படும். ஆனால், பிரீமியம் தட்கல் என்றால் என்னவென்று புரியாமல் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.

பிரீமியம் தட்கல் என்றால் என்ன? பிரீமியம் தட்கலுக்கும் சாதாரண தட்கலுக்கும் இருப்பது ஒரே ஒரு வித்தியாசம் தான். தட்கலுக்கு வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் பிரீமியம் தட்கல் டிக்கெட்களுக்கு ‘Dynamic Fare’ என்ற கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் என்பது மக்கள் டிக்கெட் எடுக்க எடுக்க அதிகரிக்கும்.

அதாவது 120 டிக்கெட்கள் பிரீமியம் தட்கல் பிரிவில் விற்கப்படுகிறது என்றால் முதல் சில டிக்கெட்கள் எடுப்பவர்களுக்கு ‘Dynamic Fare’ இருக்காது. பின் அது ஏறிக்கொண்டே இருக்கும். கடைசி சில டிக்கெட்கள் மட்டும் மீதமிருக்கும் போது டிக்கெட்டின் விலை மிக அதிகமாக இருக்கும். எனவே தட்கல் டிக்கெட்கள் கொடுக்கும் நேரத்தில் சரியாக முன்பதிவு செய்தால் டிக்கெட் விலை சாதாரணமாக இருக்கும், தட்கலுக்கு பதில் இதையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

மேலும் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வருகையில் பிரீமியம் தட்கல் பிரிவில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கலாம். பல நேரங்களில் சார்ட் ரெடி ஆகும் முன்வரை இதில் டிக்கெட் இருக்கும். ஆனால், விலை அதிகமாக இருக்கும். இது அவசர வேளைகளில் கூடுதல் விலை என்றாலும் பரவாயில்லை என்று இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் .

அடுத்தபடியாக நிறைய பேருக்கு ஏசியில் பயணிக்கனும்னு ஆசை இருக்கும், ஆனால் பணப் பற்றாக்குறை காரணமாக ஸ்லீப்பர் டிக்கெட் போட வேண்டி இருக்கும். ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி யில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்து ஏசியில் பயணிக்க முடியும் ! அது எப்படி என்றால், நீங்கள் ஸ்லீப்பரில் முன்பதிவு செய்யும்போது ‘Consider for Auto Upgradation’ என்ற செக்பாக்ஸை டிக் செய்திருந்தால் ஸ்லீப்பர் டிக்கெட் போட்டு ஏசியில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். அதாவது நீங்கள் ஸ்லீப்பர் முன் பதிவு செய்து சார்ட் தயார் செய்யும் போது ஏசி கோச்சில் காலி இடங்கள் இருந்தால் உங்கள் ஸ்லீப்பர் டிக்கெட் ஏசி கோச்சிற்கு மாற்ற வாய்ப்புண்டு.

விழாக்கள் விடுமுறைகள் தொடந்து வந்து கொண்டு இருக்கும் இந்நிலையில் இந்த ஐ.ஆர்.சி.டி.சி டிப்ஸை யூஸ் பண்ணி பயன் பெறுங்கள்.

author avatar
Parthipan K