சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

0
95

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

சிம்புவின் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே ஏதும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இறுதியாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடித்த அனைத்து படங்களிலும் சிம்புவின் உடல் எடை அதிக அளவு கூடி இருந்தது. இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்து வெற்றி அடைய முடியாது என்று பலர் பேசி வந்தனர். அவர்கள் மத்தியில் சிம்பு தனது உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் தனது ரீ என்ட்ரியை கொடுத்தார். சிம்பு மீது பல இயக்குனர்களும் பல குற்றச்சாட்டுகளை அளித்து வந்தனர்.

சிம்பு எப்பொழுதும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வருவது முதல் குற்றச்சாட்டாக இருந்தது. மாநாடு படம் நடக்கத் தொடங்கியது முதல் தாமதமாக வருவதில்லை என்ற செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு இருக்கையில் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் விஐடி பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன், கங்கை அமரன் ,புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பல முன்னணி நடிகர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவானது மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்க இருந்தனர். ஆனால் சிம்பு 6 மணிக்கு விழாவில் கலந்துகொள்ளாமல் இரவு 8.30 மணிக்கு கலந்து கொண்டார். இரண்டு மணி நேரம் தாமதம் ஆனதால் கோபமுற்ற தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் காத்திருக்க முடியாமல் கிளம்பினர். மேலும் சிம்புவிற்கு விருது கொடுக்க இருந்த விஐடி பல்கலைக்கழக வேந்தரும் ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து கிளம்பினார்.

சிம்பு கேஷுவலாக சாலைகளில் கூட்ட நெரிசலால் இரண்டரை மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது என்று கூறிவிட்டார். சிம்புவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் விஷ்ணு பிரபு விருது அளித்தார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு படம் வெற்றி அடைந்ததை அடுத்து மீண்டும் சிம்பு பழைய வேலையை காண்பிக்கிறார் என கூறிவருகின்றனர்.