வாரிசு மற்றும் துணிவு படத்தில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் இவ்வளவா? மலைக்க வைக்கும் அப்டேட்!!

0
105
How much are Vijay and Ajith's salary in Warisu and Thadhavu? Awesome update!!
How much are Vijay and Ajith's salary in Warisu and Thadhavu? Awesome update!!

வாரிசு மற்றும் துணிவு படத்தில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் இவ்வளவா? மலைக்க வைக்கும் அப்டேட்!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் என பல்வேறு நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி உள்ள படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணா இந்த படத்தை இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே! மற்றும் தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றன. இந்த படத்தினை 4 முக்கிய நகரங்களில் ரெட்ஜெயண்ட் மூவிஸ் மற்றும் பிற இடங்களில் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

இதனையடுத்து படத்தின் இசை வெளியீடு நேற்று முன்தினம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.பல்வேறு ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குடும்ப பின்னணியை கொண்ட படமாகும்.

இதேபோல் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிக்கும் படம் தான் துணிவு!. இந்த படத்தினை இந்தியாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படமானது நேர்கொண்ட பார்வை, வலிமை, என மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணையும் படமாகும்.

இந்த படத்தில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியார், மகாநதி சங்கர், ஜான் கோக்கேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது கேங் ஸ்டார் படமாகும். இந்த படத்தினை தமிழ்நாடு முழுவதும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வெளியிட இருக்கிறது.

பொங்கலுக்கு விஜயின் வாரிசு, மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. கடந்த 9 வருடங்களுக்கு பின்னர் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் ரீலீஸ் செய்யப் படுகின்றன. இதனால் தல மற்றும் தளபதி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் இருவரும் தங்கள் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வந்துள்ளது. வாரிசு படத்திற்கு நடிகர் விஜய் 120 கோடியும், துணிவு படத்திற்காக அஜித் 70 கோடியும் சம்பளமாக பெற்று உள்ளனர்.