மனைவியின் மரணம்! நெருக்கமான நண்பர்களைக் கண்டால் கதறி அழும் ஓபிஎஸ்!

0
144

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சமீபத்தில்தான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.ஏனென்றால் அவருடைய மனைவி உயிருடன் இருந்த வரையில் பன்னீர்செல்வத்தை பிரிந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்தால் அவருடைய மனைவியும் சென்னையில் இருப்பார். பன்னீர்செல்வம் தேனியில் இருந்தால் அவரும் தேனியில் இருப்பார், இப்படி பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடைய நிழலாக அவரை பின் தொடர்ந்தவர் அவருடன் அவருடைய மனைவி.

இன்னும் சொல்லப்போனால் அவர் டெல்லிக்கு சென்றால்கூட அங்கேயும் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விடுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கட்சியின் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும்போது மட்டும் பன்னீர்செல்வத்தை அவருடைய மனைவி பிரிந்து இருப்பார் என கூறப்படுகின்றது.இந்த சூழ்நிலையில், தன்னுடைய மனைவியின் இறப்பு துக்கத்தில் இருந்து இதுவரையில் அவர் முழுமையாக மீண்டு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

அவரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வருகை தருபவர்களிடம் அமைதியை மட்டுமே பதிலாக வெளிப்படுத்தி வருகிறார் பன்னீர்செல்வம். அவ்வபோது மனைவி இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத அவர் கண் கலங்கி அழுதே விடுகிறாராம்.தன்னுடைய மனைவியின் பழைய நினைவுகளை மனதில் சுமந்தவாறு மிகவும் சோகமாக காட்சி தரும் பன்னீர்செல்வத்தை அவருடைய மகள் மற்றும் மகன் தேற்ற முற்பட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது..

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்றவாரம் மாரடைப்பு காரணமாக, சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார் இதனை தொடர்ந்து அவருடைய உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா, வைகோ, கி வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு பன்னீர்செல்வத்திற்கு மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பூதவுடல் அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மனைவியின் உடல் முன்னே செல்ல அவர் உடல் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து பன்னீர்செல்வமும் பெரிய குளத்திற்கு சென்றார். அங்கே ஒட்டு மொத்த ஊரும் ஒன்று திரண்டு விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி முடித்தபின்னர் இறுதிச்சடங்கு நடந்தது.

மூத்த மகன் என்ற முறையில் தன்னுடைய தாய்க்கான இறுதிச் சடங்குகளை ரவீந்திரநாத் செய்தார் அவர் தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பன்னீர்செல்வம் தன்னுடைய மனைவியின் மரணம் துக்கம் தாங்கமுடியாமல் சட்டசபை நிகழ்வுகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து சொந்த ஊரிலேயே தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு ஆறுதல் கூற அவரை காண்பதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரையில் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் லாபம் பெற்ற முக்கிய தொழிலதிபர்கள் ஒரு சிலரும் தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு எந்தவிதமான ஆராவாரமில்லாமல் சைலன்டாக சென்று வந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் பன்னீர்செல்வம் எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக ஒரு சில விஷயங்களை நாம் கேள்விப் படுகின்றோம்.அதாவது தன்னுடைய மனைவியின் மரணத்தை ஓபிஎஸ் அவர்களால் இதுவரையில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வளவு அந்நியோன்யமாக இருவரும் இருந்து இருக்கிறார்கள். அதோடு ஒருவர் மீது ஒருவர் அளவற்ற பாசமும் வைத்திருந்திருக்கிறார்கள். விஜயலட்சுமியின் மரணத்திற்கு முன்னால் ஒரு நிமிடம் கூட தன்னுடைய மனைவியை பிரியாமல் இருந்த பன்னீர் செல்வத்திற்கு இதுவரையில் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்வதற்கான மனநிலை ஏற்படவில்லை என்கிறார்கள் தேனி மாவட்ட மக்கள்.

விஜயலட்சுமியின் இறுதி காரியத்திற்கு பின்னர் பன்னீர்செல்வம் மிகவும் உடைந்து போய் விட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னர் அவருக்கு அமைதியும், தனிமையும் தான் தேவையாக இருக்கிறது. எனவும், பன்னீர்செல்வத்தை அவருடைய குடும்பத்தைச் சார்ந்த உறவுகாரர்களும் மற்றும் மகன், மகள், பேரன், பேத்திகள் உள்ளிட்டோர் தேற்றி வருவதாகவும், சொல்லப்படுகிறது.
அதேநேரம் பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் விஜயலட்சுமி புகைப்படத்தை பார்த்துக்கொண்டே தன்னுள் இருக்கும் சோகத்தை தன்னுள்ளேயே மறைத்து வைத்திருக்கிறார் பன்னீர்செல்வம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் நபர்கள் வந்தால் மட்டும் அவர் கண்களிலிருந்து நீர் தானாக வெளிவருகிறது என்று சொல்லப்படுகிறது.

பன்னீர்செல்வத்தின் குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்து வந்த தன்னுடைய மனைவியின் மறைவை அவ்வளவு எளிதில் மறந்து விடுவது என்பது யாராக இருந்தாலும் எளிதான காரியமல்ல அதிலிருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறார்கள்