ஆஹா ஆரம்பமே அசத்தல்! ஆனால் முடிவு எப்படி இருக்கும்? முதல்வருக்கு டெஸ்ட் வைத்த அரசியல் விமர்சகர்கள்!

0
109

வடகிழக்கு பருவமழை தொடங்கிய வேகத்திலேயே சென்னையை புரட்டி போட்டு விட்டது. இரவு பகல் பாராமல் கொட்டி தீர்த்த கனமழை இன்று சற்றே ஓய்வு எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு நாள் மழைக்கு திமுக கதறுகிறது என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.

ஒரு மணி நேரம் இடைவேளை இல்லாமல் செய்தாலே சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறிவிடும். மேலும் லாரி ட்யூப் களையும் ரத்தர் படகுகளையும் சாலைக்கு கொண்டு வந்து சிலர் போட்டோ வீடியோ சூட் போன்றவற்றை நடத்தி விடுவார்கள் ஆனால் நான்கு நாள் பெய்த கனமழையால் இன்று அப்படியான எந்த விதமான சம்பவங்களும் நடைபெறவில்லை.

மழைநீர் வடிகால்களை சென்னை முழுவதும் சற்றேற குறைய அனைத்து தெருக்களிலும் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டனர்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டனர் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தனர் சில பகுதிகளில் தொடங்கி முடிக்கப்படாமல் இருக்கின்றன என்றும்.

பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் மழை நீர் தேங்காமல் முறையாக வடிந்து மக்களை நிம்மதி அடைய செய்தது நிறைவு பெறாத தொடங்கப்படாத பகுதிகளில் மழை நீர் வழக்கம்போல தேங்கி நின்றன. ஒன்றிரண்டு சுரங்க பாதைகளும் நீச்சல் குளங்களாக மாறினர். ஆனால் அதிகாரிகளும், அமைச்சர்களும், மாநகராட்சி நிர்வாகமும் ராட்சத மோட்டார் பம்புகள் மூலமாக தண்ணீரை வெளியேற்ற தொடங்கினர்.

இதன் மூலமாக தமிழக அரசு தன் மீது பெரிய அளவில் புகார் எழாமல் தப்பித்துக் கொண்டது மக்களும் இந்த பருவமழையை எளிதாக கடந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் தலைவரிடம் பேசிய போது தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் துரிதமாக இருந்ததன் காரணமாகவே சென்னை இந்த நான்கு நாட்கள் மழையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

ஆனால் பருவமழை தற்போது தான் தொடங்கியுள்ளது இன்னும் இரண்டு மாதங்கள் முழுதாக இருக்கின்றன டிசம்பர் மாதம் முடியும் வரையில் ரிலாக்ஸ் மூடுக்கு செல்ல முடியாது.

வடிகால் பணிகள் முடிவடையாத பகுதிகளில் சமீபத்தில் பணிகள் நிறைவடைந்த இடங்களில் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொடர்க கவனம் செலுத்த வேண்டும் நாட்கள் செல்ல செல்ல பணியில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது. மழைநீர் வடிகால்களில் அடைப்பு எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

வடிகால்கள் சிறப்பாக அமைக்கப்பட்டாலும் சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. சென்னையின் சாலைகள் கடந்த சில வருடங்களாக மிக மோசமான நிலையில், இருக்கின்றன வடிகால் அமைக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன.

மழை காரணமாகவும் பல பகுதிகளில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன குண்டும், குழியுமான சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமழை முடிவடைந்த உடன் தமிழக அரசு சாலைகள் அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.