இசையமைப்பாளருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
69

இசையமைப்பாளருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.இவர் தனது 16வது வயதில் 1997ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்நிலையில் அவரது பயணத்தை பாராட்டி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 31வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் அவரது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் யுவன் பயோபிக் உருவாக வாய்ப்பிருக்கிறதா என கேட்டபோது இது வரை அப்படி எந்த ஐடியாவும் இல்லை . அப்படி இருந்தால் அதில் நானே நடிப்பேன் என அவர் கூறிவுள்ளார்.

author avatar
CineDesk