3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

0
68

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதலில் சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்று பரவி வந்தது.

அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவிய இந்த நோய் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள்.

இதனால் உலகளவில் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள்.

முதலில் இந்த நோய் தொற்றுக்கு மாற்று மருந்தே இல்லை என்ற நிலை இருந்து வந்தது, ஆனாலும் தற்சமயம் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஒமைக்ரான் வகை நோய் தொற்றால் ஹாங்காங்கில் புதிதாக இந்த நோய்த்தொற்று ஏற்படும் நபர்கள் எண்ணிக்கை மிக வெகுவாக அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1347 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் திணறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.