அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

0
107

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

அனைத்திற்கும் ஒரே மருந்து !! இன்றைய மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும்.

கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினோம் அதனால் அதன் விளைவாய் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள் மாற்றியதே காரணம். அனைத்தும் ரசாயனம் கொண்டு தயாராகி வருகிறது.

நோய் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது. அந்த மந்திர சொல்தான் ‘முருங்கை”. நமது உணவில் தினமும் முருங்கை கீரை, காய், பூ என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்வது அவசியம். இதில் சமைத்த முருங்கைக்காயை விட கீரை மிக நல்லது. அதையும்விட முருங்கை பூவில் எடுக்கும் தேன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இது உடல் பருமனை குறைக்கும் சக்தி கொண்டது. குழந்தை இன்மைக்கு நல்ல மருந்தாகும். உடல் வலுப்பெற ஒரு நல்ல உணவு பழக்கம் ஆகும். சக்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. கண்பார்வை குறையை நீக்கும்.

அன்று விவசாயம் சார்ந்து இயங்கிய நாம் இயல்பாகவே நல்ல உணவுபழக்கங்களை கொண்டிருந்தோம். அது மெல்ல மெல்ல நகரமயத்திற்கு சென்று காலை 9 முதல் மாலை 6 வரையிலான புதிய வேலை, வாழ்க்கைமுறை, பொருளாதாரத்தை மையப்படுத்திய வாழ்க்கை என்று மாறத்தொடங்கிய நாள்முதல் அதற்கு ஏற்றாற்போல் நமது உணவுபழக்கமும் மாறிவிட்டது.

ஆனால், இன்று மேற்கத்திய உணவுமுறை ஆதிக்கம் மற்றும் தினமும் ஒரே வகையான தோசை, பொங்கல் போன்ற உணவுகள் நமது ஆரோக்கியத்தை கெடுத்தது என்றே சொல்லலாம்.

இன்றைய வாழ்க்கை இப்படித்தான் என்பது நிதர்சனம். ஆனால், நாம் நலமுடன் வாழ வேண்டும் என்பதும் அவசியம். ஆகவே, அன்றுபோல் இயற்கையாய் அமைந்த உணவுபழக்கங்கள் போல் இல்லாமல் நாமே நமது உடலை படித்து நமக்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது இயல்பான வாழ்க்கை முறையில் உணவுபழக்கம் எவ்வாறாக இருந்தாலும் தினமும் ஒரு கரண்டி இந்த முருங்கை பூ தேன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

நல்லதையே உண்போம் நலமுடன் வாழ்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K