அல்சர் நெஞ்செரிச்சல் சரியாக இதை குடித்தால் போதும்!

0
80

இன்றைக்கு இளைய தலைமுறையினர் இருந்து பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உண்ணாததால் தான் அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதை குணமாக்க இயற்கை முறையை நாம் இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1.பன்னீர் ரோஜா ஒன்று

2.கல் உப்பு சிறிதளவு

3.தயிர் ஒரு ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ரோஜா இதழ்களைப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும்.

3. பின் அதில் ஒரு ஸ்பூன் அளவு தயிரை சேர்க்கவும். தயிர் புளிப்பு இருக்கக் கூடாது இருந்தால் அல்சர் உள்ளவர்களுக்கு மேலும் அது அதிகமாகி விடும்.

4. சிறிது அளவு கல்லுப்பு போட்டு கலக்கி கொள்ளவும்.

5. ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.

இதனை நீங்கள் மூன்று வேளையும் சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 5 நிமிடம் கழித்து இதை நீங்கள் குடித்து வந்தால் அல்சர் நெஞ்செரிச்சல் உடனே சரியாகிவிடும். இதனை தொடர்ந்து நீங்கள் மூன்று நாட்கள் வரை குடிக்கலாம்.

தயிரானது அல்சரால் ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நீங்கள் தயிரை பயன்படுத்தி சாப்பிடும்பொழுது உடனடி தீர்வு கிடைக்கும்.

தயிர் பிடிக்காதவர்கள் ஒரு ரோஜா பூவை சிறிது சிறிதாக நறுக்கி அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு அடுத்த நாள் இதனை எடுத்து சாப்பிடலாம். அப்படி ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் குணமடைந்து விடும்.

author avatar
Kowsalya