தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

0

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சந்தானம். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

இவ்வாறு தமிழ் திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராக தனது திறமையை நிரூபித்த சந்தானம் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா “ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகம் ஆனார். அந்த படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,இங்க என்ன சொல்லுது,இனிமே இப்படி தான், சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு மற்றும் சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2 ஆம் பாகம் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி,சர்வர் சுந்தரம் போன்ற படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவ்வாறு நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் நடிகராக அறிமுகம் ஆகும் போது தமிழ் திரையுலக நடிகைகள் யாரும் இவருடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் இனிமேல் நான் நடிக்கும் படங்களில் வேற்று மொழி நடிகைகள் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த நடிகர் சந்தானம் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறார். இதுவரை அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்திலும் இந்தி மற்றும் தெலுங்கு மொழியை சேர்ந்த வெளி மாநில நடிகைகளே நடித்திருக்கிறார்கள்.

தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றியை கொடுத்ததால் அவரது ஹீரோ மார்க்கெட் உயர்ந்துள்ளது. இவ்வாறு நடிகர் சந்தானத்தின் மார்க்கெட் உயர்ந்ததால் ஏற்கனவே புறக்கணித்த தமிழ் நடிகைகள் இவருடன் இணைந்து நடிக்க அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனாலும் பழையதை மறக்காத நடிகர் சந்தானம் சற்றும் இறங்கி வராமல் ஏற்கனவே பல இந்தி நடிகைகள் தன்னுடைய படத்தில் நடிக்க காத்திருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த பிறகு உங்களுடன் நடிப்பதை பற்றி யோசிக்கிறேன் அதுவரைக்கும் காத்திருங்கள் என்று கெத்தாக கூறியுள்ளாராம்.    

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat