Connect with us

Breaking News

இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Published

on

Holidays for schools only in this district! Action order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

காஞ்சிபுரம் அருகே குருவிமலை  அடுத்த பழத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பட்டாசு ஆலையில்  நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி வெடி விபத்தில்  சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

Advertisement

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் குருவிலைத் தோட்டம் பகுதியில் உள்ள இரண்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு நடப்பாண்டில் தான் 11 ,12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Advertisement

அதனால் பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு எந்த ஒரு விடுமுறையும் கிடையாது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளுக்கும் எந்த ஒரு விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெடி விபத்தின் காரணமாக அந்த பகுதியில் பெரும் சோகம் நிலவி  உள்ளது. போலீசாரின் விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகு வெடி  விபத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement