ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை

0
161
#image_title

ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை

ஹிஜாப் விவகாரத்தில் வேலூர் கோட்டை பகுதியில் நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டை பகுதியில் கடந்த 27-ம் தேதி ஆண் நண்பர்களுடன் வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்தி அவர்களை அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மற்றும் கணியம்பாடி பகுதிகளை சேர்ந்த ஒரு சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில்

சுற்றுலாத்தலமான கோட்டை பகுதியில் ஏற்கனவே தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பிறகு

தற்போதைக்கு தற்காலிகமாக காவல் உதவி மையம் கோட்டை பகுதியில் திறக்கப்பட்டு இரண்டு ஒரு நாட்களில் நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் முழு பாதுகாப்பு வழங்கப்படும். மக்கள் அச்சப்பட வேண்டாம். அதேபோல இது தொடர்பான வீடியோக்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.