உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்!

0
157

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்!

பொதுவாக செம்பருத்தி செடியில் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. செம்பருத்தி பூவை எவ்வாறு பயன்படுத்தினால் மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு செம்பருத்தி எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அந்த பூவில் உள்ள நடுவில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அந்த இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால். பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

செம்பருத்தி பூவை தினமும் எடுத்துக் கொண்டால் உடம்பில் உள்ள சோர்வுகள் நீங்கும். இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை முற்றிலும் கரைக்க செம்பருத்தி பூவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இதய நோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி மற்றும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. அதற்கு செம்பருத்தி பூவை பச்சையாகவும் அல்லது நன்கு நிழலில் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிக்கலாம்.

மேலும் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும் இவை பயன்படுகிறது. மேலும் வயிற்றுப்புண் ,வாய்ப்புண்கள் செம்பருத்தி பூவை தினந்தோறும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தோள்கள் மென்மையாக இருக்க செம்பருத்தி பூ பயன்படுகிறது. தோலில் எப்பொழுதும் ஈரம் பதத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த செம்பருத்தி பூ உதவுகிறது.

 

 

author avatar
Parthipan K