கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக! கருந்துளசி கஷாயம்!

0
204
Hepatosplenomegaly exactly! Black basil infusion!
#image_title

கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக! கருந்துளசி கஷாயம்!

கல்லீரல் வீக்கம் என்பது கல்லீரல் விரிவடைவது. அதாவது கல்லீரலில் தேவையற்ற ஏதாவது ஒன்று சேரும்போது எடுத்துக்காட்டாக, கொழுப்பு அதிக அளவில் சேர்வது, அதிகளவில் மது அருந்துவது, க்ரோனிக் வைரல் என்று சொல்லப்படும் ஹெபடைடீஸ் பி, ஹெபடைடீஸ் தொற்று போன்றவை ஏற்படும்போது தான் கல்லீரல் பெரிதாக விரிவடைகிறது. இதைத்தான் கல்லீரல் வீக்கம் என்கிறோம். அதை எப்படி சரிசெய்வது என்பது தான் இன்றைய குறிப்பு

தேவையான மூலிகைகள்

1. கருந்துளசி – 1 கைப்பிடி
2. கருந்துளசி வேர் – 10கிராம்
3. மிளகு – 10
4. சித்தரத்தை – 25கிராம்
5. சதகுப்பை – 25கிராம்

செய்முறை:

1. கருதுளசி மற்றும் கருந்துளசி வேர், சதகுப்பை, மிளகு, சித்திரத்தை என அனைத்து தேவையான மூலப்பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்.

2. சூரிய ஒளியில் நன்கு காயவைத்து சுத்தம் செய்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

3. பாத்திரத்தில் 200மி நீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு பொடியை கலந்து நன்கு 100மி ஆக சுண்டியதும் சூடாக டீ போல குடிக்கவும்

3. தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் அல்லது பின் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளவும்.

இத்தனை தொடர்ந்து 1 மாதம் எடுக்கும் பொழுது கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவை சுத்தமாகும்,வீக்கம் வலி ஆகியவை சரியாகும்

author avatar
Kowsalya