இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
81
Henceforth the cases should be listed in this manner only! Action order issued by the Chief Justice!
Henceforth the cases should be listed in this manner only! Action order issued by the Chief Justice!

இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

நேற்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்.அப்போது அவர் அவருடைய பணியை தொடங்கிய உடனே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றவேண்டும் என பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி திங்கள் ,செவ்வாய் ,புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் பதிவு செய்யப்படும் மனுக்கள் அடுத்த வெள்ளிகிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

இந்த நடைமுறையை பின்பற்றினால் மனுக்கள் பட்டியலிடுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் என கூறினார்.அவசர வழக்கு என்றால் தனியாக முறையிடலாம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி மனுக்களை பதிவாளர் பரிசீலனை செய்வார்கள்.மனுக்களில் பிழை இல்லாத நிலையில் தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

அவர் மனுக்களை சரிபார்த்து குறிப்பிட்ட அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடுவார்.இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளர் அலுவலகத்துக்கு முன்னதாக இருந்த தலைமை நீதிபதி யு.யு லலித் உத்தரவிட்டர்.  கடந்த ஐந்தாம் தேதி பதிவாளர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K