கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

0
83

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் பனியினால் மின்சாரம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெக்சாசில் பல்வேறு முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் நிலவி வரும் கடும் பனியினாலும், புயல் காற்றாலும், ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர் நிலவுவதால், அங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழலில் தெருவிலே குவிந்துகிடக்கும் பணியின் மீது சிலர் பனிச்சறுக்கு விளையாடி வருகின்றனராம்.

author avatar
Parthipan K