இந்தியாவில் பெய்த கனமழையால் வங்கதேசத்தில் கடுமையான வெள்ளம்

0
70

வங்கதேசத்தில்  பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தின் மத்திய பகுதியில், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்தும் பண்ணைகளிலிருந்தும் கிராமத்து மக்கள் படகுகளில் வெளியேறினர். வெள்ளத்தைத் தடுப்பதற்காக அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகளை மீறி, கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அருகிலுள்ள இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனத்த மழையால், வங்கதேசத்தில் வெள்ளம் கடுமையானது.

அங்கே, மனிதாபிமான நெருக்கடி உருவாகலாமென அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது. வங்கதேசத்தின் மூன்றில் ஒரு பகுதி, வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டது சங்கம். வரும் வாரங்களில், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா நோய்ப்பரவலால் வங்கதேசத்தில், முடக்கநிலை நடப்பிலுள்ளது. அதனால் ஏற்கெனவே, இயல்புவாழ்க்கை அங்கே பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், வெள்ளம் கூடுதல் வேதனையைத் தந்திருக்கிறது.

author avatar
Parthipan K