இன்று இந்த 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

0
74

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு நடுவே மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டிருப்பதன் காரணமாக, இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓர் இரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மிதமான அல்லது லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33.34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25.26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலினடிப்படையில் நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 சென்டிமீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 9 சோலையாறு, மேல் பவானி, வால்பாறை, போன்ற பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மறையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.