விவசாயிகள் மகிழ்ச்சி! இந்த 5 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை!

0
90

பருவ மழை பெய்ய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் இந்த மழையின் காரணமாக, மகிழ்ச்சியடைந்து வந்தாலும் சில இடங்களில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை கொண்டிருக்கிறார்கள்.

சாகுபடிக்கு சரியான நேரத்தில் மழை பெய்தால் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்கும். அப்படி சரியான சமயத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறிய மழை பெய்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும். இதன் காரணமாக, பல விவசாயிகள் கவலையடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கோவை ,தேனி. நீலகிரி, திண்டுக்கல், தென்காசி. உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வரும் 20 மற்றும் 21 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான தமிழர்கள் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை பொறுத்த வரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34.35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26.27 இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்றும் நாளையும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் எனவும், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் அகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீச கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.