Connect with us

Breaking News

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Published

on

Heavy rain since morning? Information released by Chennai Meteorological Department!

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

கடந்த டிசம்பர் மாதத்தில் புயல் ஒன்று உருவானது அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஜனவரி மாதத்தின் முதலில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகின்றது. அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை அண்ணாசாலை, காமராஜர்  சாலை, எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகின்றது. மேலும் இன்னும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement