விடாது பெய்த பேய் மழை! வானத்திலேயே வட்டமடித்த விமானங்கள்!

0
112

நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. அதேபோல 9 சர்வதேச விமானங்கள் கிளம்பும்போது தாமதம் உண்டானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கின்றன. இன்று காலை முதல் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அதேபோல சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகளும் வெகுவாக பாதிப்படைந்து இருக்கின்றன. அதிகாலை முதல் மழை பெய்து கொண்டே இருந்ததன் காரணமாக, விமானங்கள் தரை இறங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து இன்று அதிகாலை சுமார் 2 30 மணி அளவில் 142 பயணிகளுடன் வருகைதந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் மழை இடி மின்னலுடன் செய்த காரணத்தினால், சென்னையில் அந்த விமானம் தரை இறங்க முடியாமல் தவித்தது. அதன் பின்னர் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல துபாயில் இருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2 மணி 40 நிமிடத்திற்கு வருகை தந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல 3:00 மணி அளவில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அதேபோல 3:20 மணிக்கு கொழும்புவில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் உள்ளிட்டவை சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க இயலாமல் நீண்டநேரம் வானிலேயே வட்டமடித்து நின்றது. அதன்பின்னர் வானிலை சீரான உடன் விமானங்கள் தரை இறங்கின. அதேபோல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் சிங்கப்பூர், துபாய், சார்ஜா, ஹாங்காங் கொழும்பு உள்ளிட்ட 9 பன்னாட்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக கிளம்பி சென்றனர். 4 மணி அளவில் மறைந்த பின்னரே பெங்களூரு சென்ற விமானங்கள் சென்னை திரும்பினர். இதன் காரணமாக, விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.