இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
82
Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!
Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. பிறகு  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K