தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு! வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
74

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கலாம். ஆனாலும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் இடியும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்று காலை வரையில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் ஆகவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.