நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

0
66

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை பெய்ததால் நகரம் மறுபடியும் தண்ணீரில் மிதக்க தொடங்கியது. பல பகுதிகளில் மழை நீர் வடிய இடமில்லாமல் தேங்கி நின்றது. இதன்காரணமாக, பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் உண்டானது.

சென்னையில் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் நேற்று பிற்பகல் வரையிலும் வெயில் சுட்டெரித்து அடித்தது இந்த சூழ்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை அருகே ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் மூலமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு வழங்கி இருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் ஆகவே எதிர்வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்றைய தினம் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற தென் மாவட்டங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை  மற்றும் சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இடங்களில் மிதமான வகையில் உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வரும் 26ம் தேதி மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, உள்ளிட்ட நகரங்களில் மற்றும் ஈரோடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கணம் முதல் மிகக்கன மழையும், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதோடு காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இலங்கையை ஒட்டிய பகுதியில் தான் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படப்போகிறது, இது புயலாக வலு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாக 320 5.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி வேண்டும். ஆனால் 535.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது இது இயல்பான மழை அளவை விடவும் 64% அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சென்னையில் 555.4 மில்லி மீட்டர் மழை இயல்பாக இருக்கவேண்டும் ஆனால் ஆனால் 973 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 66 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சென்னையை பொருத்தவரையில் என்ற வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. வரும் 26 மற்றும் 27 தேதிகளில் கண்யகுமரி கடல், மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் கடலோர பகுதிகள் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், சோழவரம், பந்தலூர், உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக காமாட்சிபுரம், சிவகிரி, உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் 5️ சென்டி மீட்டர் மழையும், டிஜிபி அலுவலகம், எழிலகம், கூடலூர் பஜார், அவிநாசி, கோவிலங்குளம், ஓமலூர், மேல் கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழையும், அயனாவரம், தண்டையார்பேட்டை, திருப்பத்தூர், துவாக்குடி, தண்டராம்பேட்டை, தூத்துக்குடி விமானநிலையம், கோபிசெட்டிபாளையம், திருக்காட்டுப்பள்ளி, மூங்கில் துறைப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here