கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 

0
117
Heavy rain echo! Damage to the special path of the disabled!
Heavy rain echo! Damage to the special path of the disabled!

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அனைவரும் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை அருகில் இருந்து பார்க்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.

வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த பாதை சுமார் 300 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.கான்கிரீட் போடாமல் மரப்பலகையால் ரூ 1 கோடி செலவில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது.இந்த மாதம் மூன்றாம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் அந்த சிறப்பு பாதையை பயன்படுத்தி மகிழ்ந்தனர். இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புயல் உருவாகியுள்ளது.

அதற்கு மாண்டஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வந்ததால் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.மேலும் கடலுக்கு அருகில் உள்ள பாதைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K